பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நாளை கையளிப்பு!

Date:

ஒரு முறை பாவித்து நீக்கப்படும் 7 வகையான பிலாஸ்ட்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வதுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் ஒன்று நாளை (30) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவற்றினுள், பிலாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பானம் உறிஞ்சான், முட்கரண்டி, குடிநீர் கோப்பை, கேக் வெட்டும் கத்தி, கத்தி, இடியப்பத் தட்டு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனினால் தயாரிக்கப்பட்ட பூ மாலைகள் ஆகியன உள்ளடங்குகின்றன.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து ´செசே´ பெக்கெட்டுகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிலாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திப் பொருட்களை தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேபோல், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து உக்காத லன்ச்சீ்ட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதே வேளை, நாட்டில் ஆண்டுதோறும் 2 பில்லியனுக்கும் அதிகமான பொலித்தீன் பைகள் கொட்டப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்: கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு!

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே இன்று காலை...

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை இன்று (06) முதல் ஆரம்பிப்பதற்குத்...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: மோதல் நிலை குறித்து விசாரிக்க விசேட குழு!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் நேற்றைய (05) தினம் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்...

நாட்டின் சில இடங்களில் சிறிதளவில் மழை

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...