பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் இனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்த யுவதி, தற்போதும் கன்னிப் பெண் என நீதிமன்று முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய ராமசந்திரன் ஷஷி குமாரி எனும் யுவதியினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிசாரினால் நீதிமன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த யுவதி தொடர்பிலான வைத்திய அறிக்கையில், குறித்த யுவதியின் கன்னி ஊடுருவலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அது தொடர்பிலான அறிக்கை கடந்த 16ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.