வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கொவிட் 19 இற்கான விஷேட சிகிச்சைப் பிரிவு இன்று (16) திறந்து வைக்கப்பட்டது

Date:

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கமைவாக, கடற்படையின் பங்களிப்புடன் கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கொவிட் 19 இற்கான விஷேட சிகிச்சைப் பிரிவு இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் வேண்டுகோளினை அடுத்து, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் இதன் கட்டுமானப் பணிகளுக்கு கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் பணியாளர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை நன்கொடையாளர்களின் உதவியுடன் 2021 மே 03 இல் ஆரம்பிக்கப்பட்டு 2021 ஜூலை 06 இல் நிறைவடைந்தன.
இவ்வாறு குறுகியது காலப்பகுதியில் கட்டப்பட்ட இந்த விஷேட சிகிச்சைப் பிரிவில் விஷேட வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளதுடன், விஷேட சிகிச்சை தேவைப்படும் தொற்றாளர்கள் 20 பேருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் 20 HDU வகை கட்டில்கள் உள்ளன.
சுகாதார விதிமுறைகளை பேணி நடைபெற்ற திறந்து வைக்கும் நிகழ்வில் மேற்கு கடற்படை கட்டளை துணை தளபதி சுரேஷ் டி சில்வா, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நளீன் ஆரியரத்ன, வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை அதிகாரி மொஹமட் இப்ராஹிம் சிராஜ் உள்ளிட்ட வைத்தியசாலை பணியாளர்களும், சில கடற்படை வீரர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
(ரிஹ்மி ஹக்கீம்)

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...