வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக பயணிப்பவர்களுக்கு பொருத்தமான தடுப்பூசி இன்று முதல்!

Date:

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல இருக்கும் இலங்கை தொழிலாளர்களுக்கு, அந்தந்த நாடுகளுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் இன்று (31) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது.

இந்த வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் பணியகத்திற்கு செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.இந்த தடுப்பூசி நடவடிக்கைகள் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும். அதற்காக ஒரு குறிப்பிட்ட திகதி மற்றும் நேரம் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும்.

இதுவரையிலும், 30,000 -க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12,000 -க்கும் மேற்பட்டோருக்கு பொருத்தமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் தொழிலாளர்கள் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின், 24 மணிநேர சேவையில் உள்ள 1989 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...