அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம் குறித்து முன்னாள் சபாநாயகர் வெளியிட்ட விடயம்!

Date:

மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வேளையில் அவர்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசிய உணவுப்பொருட்களை செயற்திறனான வகையில் பகிர்ந்தளிப்பதில் அரசாங்கம் தோல்வியடையும் வேளையில், அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது என கரு ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் சீனியின் சந்தை விலை 85 ரூபாயாக காணப்பட்டதுடன், போதுமானளவு சீனி கையிருப்பில் உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் நேற்று முன்தினம் சீனியின் சந்தைவிலை 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...