அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறிய ஞானசாரவிற்கு எதிராக முஸ்லிம் எம்பிக்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – இராசமாணிக்கம் சாணக்கியன் அதிரடி கேள்வி!

Date:

இஸ்லாமியர்களின் இறைவனான அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று தெரிவித்த ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் வாய்திறக்கவில்லை ஏன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி சர்வதேச நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களுடன் பேசத்தயார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதையிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

எந்த வாக்குறுதிகளை அளித்தாலும் ஜி.பி.எஸ் வரிச்சலுகை இழக்கப்படுவது உறுதி எனவும் அதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மீது விசாரணை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...