இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளது

Date:

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளன.

ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் ஆடவர் அணி பாகிஸ்தானில் 2021 அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் இரண்டு இருபது 20 போட்டிகளில் விளையாட இருந்தது.

அதேநேரத்தில் மகளிர் அணி இரண்டு இருபது 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட வரையறுக்கப்பட்ட ஓவர் தொடருக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்தது.

இதேவேளை, அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, இறுதி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை கைவிட்டு மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...