இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம்!

Date:

விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் கீழ் சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம், வைத்தியசாலைகளிலும் வழங்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட அனைவரும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு பரிந்துரைத்துள்ளனர். தடுப்பூசியினால் ஏற்படக்கூடும் பாதிப்பு நிலை தொடர்பாக உலகிலேயே பதிவாகிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிகழ்வுகளை கருத்திற்கொண்டதன் பின்னர் தடுப்பூசியில் உள்ள பாதுகாப்பான பெறுபேறுகளை அடுத்து தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என்பதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

எனவே, உலகின் பல நாடுகளில் சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையிலும் அந்த வழிகாட்டல்கள் மூலம் அதே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் நிலை குறிப்பிட்ட ஒருசிலருக்கு மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் தடுப்பூசியினால் கிடைக்கின்ற பாதுகாப்பு மற்றும் நன்மைகள் அதை விட அதிகமானவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இதனால் ஏற்படுகின்ற சிறிய பாதிப்புகளை விட இதனால் கிடைக்கின்ற பாதுகாப்பு மிகவும் பெறுமதி வாய்ந்தது என்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையின் விசேட வைத்திய நிபுணர்கள் அனைவரும் பரிந்துரைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...