இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்த அனுமதி!

Date:

மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30-60 வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இவ்வாறு பைஸர் தடுப்பூசியை செயலூட்டியாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...