இலங்கை அணிக்கு 284 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 283 ஓட்டங்களை இலங்கை அணிக்க நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய மட்டுப்படுத்தப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென் ஆபிரிக்க அணி 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில், ஜன்னெமன் மாலன் ஒன்பது பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்களாக 121 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் இலங்கை அணியின் துஷ்மந்த சாமீர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இந்நிலையில், இலங்கை அணி 284 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...