நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது!

Date:

நாட்டில் மேலும் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கமைய, இன்றைய தினம் 2,070 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500,764 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 429,776 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 11,938 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு...

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு...

ஆகஸ்ட் முதல் 6 நாட்களில் 42,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 42,810 வெளிநாட்டுச் சுற்றுலாப்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...