நாட்டை திறப்பது தொடர்பில் இன்று தீர்மானம்!

Date:

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டை திறப்பது தொடர்பான  இறுதித் தீர்மானம் இன்றைய தினம் (17) மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று (17) இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.எவ்வாறிருப்பினும், தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிக்குமாறு இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் கோரியுள்ளது.இலங்கை தொடர்ந்தும், கொவிட்-19 அதிக அபாயம் உள்ள, அதாவது சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலயமாக மாற்றுவது எமது இலக்காக வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதே நேரம், இன்றைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில்,பாடசாலைகளை மீளத் திறத்தல் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லை குறித்தும் இதன்போது இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...