அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

Date:

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெற்று வரும் மற்றும் இதுவரை கொடுப்பனவு கிடைக்காத அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2025 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின்படி, நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பெயர் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் தமது தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் பயனாளிகளுக்கு, அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் நலன்புரி நன்மைகள் சபை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...