நீண்ட ஓய்வின் பின்னர் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Date:

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் 50 அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் சேவையில் ஈடுபடாத சில புகையிரதங்களில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறுகள், மின் கோளாறுகள், ஆசனங்களில் திருத்தங்கள், பெயின்ட் வேலைப்பாடுகள் மற்றும் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்க முடிந்ததாக ரயில் போக்குவரத்து ஒழுங்குகள் பிரிவினர் தலைமை பொறியியலாளர் கே.ஜீ.எஸ் பண்டார தெரிவித்தார்.

அத்தோடு, தற்போது 91 புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ,பிரதான புகையிரத மார்க்கத்தில் 33 சேவைகளும், சிலாபம் மார்க்கத்தில் 14 சேவைகளும், வடக்கு மார்க்கத்தில் இரு புகையிரத பயணங்களும், களனிவெளி மார்க்கத்தில் 8 புகையிரத சேவைகளும் கடலோர மார்க்கத்தில் 34 புகையிரத பயணங்களையும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...