நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்பான விபரம்!

Date:

நேற்றைய தினத்தில் (05) மாத்திரம் 3,136 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 25,838 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 887,430 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 159,088 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 41,749 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், இதுவரை 375,097 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 191,758 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 772,366 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 705,610 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...