பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளை விசேட தீர்மானம்!

Date:

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து நாளை (24) பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சு சமீபத்தில் கல்வி அமைச்சிற்கு வழிகாட்டுதல்களை பெற்றுக் கொடுத்திருந்தது.அந்த வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, மீண்டும் பாடசாலைகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளைய தினம் (24) விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது உரிய சுகாதார வழிகாட்டுதல்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...