பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,800 மெட்ரிக் தொன் சீனியுடன் பேலியகொடை பிரதேசத்தில் சீனி களஞ்சியசாலை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேலியகொடை நுகே வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் சீனி தொகையை தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த காரணத்தால் இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.