வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் கவலை!

Date:

வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிகை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் ,அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதனை அரசாங்கம் என்ற ரீதியில் நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர், இவ்வாறான சம்பவம் இடம்பெறக்கூடாத ஒன்று என்பதை மிக பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் கூறினார்.இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக செயல்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைப்பதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பாக சில ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டதுடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படமாட்டார்கள் என்று உறுதி தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரி ஒருவர் ,வெள்ளைப்பூடு சம்பவம் குறித்து தெரிவித்திருந்த கூற்று தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்திருந்ததாகவும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...