இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா சபையின் 48 வது கூட்டத் தொடர்

Date:

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (13) ஆரம்பமாகின்றது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது மனித உரிமை கூட்டத் தொடரின் 46 வது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளார்.

கூட்டத் தொடரின் 47 உறுப்பு நாடுகளும் இதனை முன்வைக்க உள்ளன. இது தொடர்பிலான கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன. இதன் போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன் அரசாங்கம் சார்பில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி இது தொடர்பில் விடயங்களை முன்வைக்க உள்ளார்.

இலங்கையைத் தவிர ஆப்கானிஸ்தான், நிக்கரகுவா, எத்தியோப்பியா, மியன்மார் மற்றும் யெமன் போன்ற நாடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பிலும் ஆணையாளர் தனது கருத்துக்களை முன்வைப்பார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...