இலங்கையின் உணவு உற்பத்திப் பொருட்களை சவுதி அரேபியாவில் விளம்பரப்படுத்தும் நோக்கில் இலங்கையிலிருந்து சவூதிக்கு இறக்குமதி செய்யப்பட்ட 140 க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும் செயற்திட்டம் ஒன்று சவூதியில் உள்ள மிகப் பெரும் சூப்பர் மார்க்கட்களில் ஒன்றான லுலுவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் சவுதி அரேபிய இலங்கைத் துாதரக அதிகாரிகள், லுலு குழுமத்தினர், சவுதி அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.