(UNIVERSAL SHOTOKAN KARATE UNION-SRI LANKA) அமைப்பினால் கடந்த மே மாதம் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட Victory International Virtual Kumite Karate Championship 2021 போட்டியில் 31 நாடுகளைச் சேர்ந்த 1034 வீர ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் SENSEI MARJAN HAREER னின் DOJO வில் பயிற்சிபெறும் 14 வயதுக்கும் குறைந்த பாடசாலை செல்லும் மாணவர்களில் 20 மாணவர்கள் கலந்து கொண்டதுடன் அதில் 4 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும் 9 மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வெற்றி பெற்றதுடன் மொத்தமாக 20 மாணவர்களில் 13 மாணவர்கள் பதக்கங்களை வெற்றியீட்டி தனது SENSEI க்கும் தர்கா நகர் ( Dharga Town) ஊருக்கும் பெருமை சேர்த்து உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
SENSEI MARJAN HAREER 2009 ஆண்டிலிருந்து கராத்தே பயிற்சி நிலையங்களை நடாத்தி மிக சிறந்த பயிற்சியினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.இந்த 20 மாணவர்களும் SENSEI MARJAN HAREER னின் DOJO வில் இணைந்து ஒரு வருடத்துக்கும் குறைந்த காலத்துக்குள்ளே இந்தப் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.