இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 18,147 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை 408,116 தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 474,780 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 10,689 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.