எந்த வகையிலும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (08) நடந்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ள காலகட்டத்தில் நீர் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.