பந்துலவிடம் சிஜடி 4 மணிநேர வாக்குமூலம்!

Date:

சதோச நிறுவனத்தில், இரண்டு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 4 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலும் வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் அமைச்சர் பந்துலகுணவர்தன, காவல்துறைமா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.வர்த்தக அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் உள்ளிட்ட முழுமையான ஆதாரங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர் பந்துலகுணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...