பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க தீர்மானம் – பேராசிரியர் சம்பத் அமரதுங்க!

Date:

பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு இரண்டு தடவையும் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கி பல்கலைகழகங்களை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்தந்த மாவட்ட சுகாதார சேவைகள் மத்திய நிலையத்தினை தொடர்பு கொண்டு விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சகல பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து பல்கலைகழக சுகாதார துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்கள் தற்போது மூடப்பட்டிருந்தாலும் சகல கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் செயற்பாடுகள் தொலைகாணொளி ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...