பாடசாலைகளை மீள திறப்பது குறித்த வழிகாட்டல்களின் தயாரிப்பு பணிகள் ஆரம்பம்!

Date:

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பனவற்றினால் அறிவிக்கப்பட வேண்டிய தொழிநுட்ப அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களின் தயாரிப்பு பணிகள் இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கொவிட்-19 பரவல் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டல்களை தயாரிக்கும் குழுவின் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் செயற்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தொழிநுட்ப குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...