பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு -இராணுவத்தின் உதவியுடன் பிரச்சினைக்கு தீர்வு!

Date:

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந் நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இராணுவ வீரர்களை கொண்டு எரிபொருள்களை கொண்டுசெல்ல பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. 5 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இராணுவ வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...