புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்!

Date:

புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கான வாகன சேவை நேற்று முதல் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த ஊர் மக்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் ஊர் மக்களுக்கும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் மற்றும் பங்களிப்புகளை வழங்கிய அனைவருக்கும் புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

இவ் வாகனம் புத்தளம் நகர எல்லைக்குள் இலவசமாகவும் ,தூர இடங்களுக்கான சேவைகளின் போது  கட்டண அறவீட்டுடன் சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பெறப்படுகின்ற பணம் வாகன பராமரிப்பு மற்றும் தாபன செலவிற்காக பயன்படுத்தப்படும் என இச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.இம் மகத்தான சேவைகளை செய்த புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கு எமது பாராட்டுக்கள்.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...