மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்த கருத்து

Date:

கொரோனாவால் கல்வியை தொடர முடியாதுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுத்து, விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதே தற்போது அரசாங்கத்தின் நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப் பெறும் முதலாவது தினத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும்.

அதற்கமைய எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையிலிருந்து மாணவர்களை மீட்டு , துரிதமாக பரீட்சைகளை நடத்துவதே எமது தற்போதைய தேவையாகும். அதற்கமைய மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக முக்கியத்துவமுடையவையாக உள்ளன.

மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளே வழங்கப்படவுள்ளன. எனவே எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு மாணவர்களையும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...