கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் இன்று ஆரம்பமாகிறது.
ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. துபாய் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன.