முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 118 ஓட்டங்களையும் சரித் அசலன்க 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் கேஷவ் மகராஜ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

தென் ஆபிரிக்க அணி சார்பில் எய்டன் மக்ரம் 96 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் இலங்கை அணியின் அகில தனஞ்சய 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...