முன்பள்ளி -ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்!

Date:

பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதன் பின்னர் ஆரம்பப் பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று(24) ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளிகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் தனியார் வாகனங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...