மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான நேற்றைய (28) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மார்க்ரம் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் கைரன் பொலார்ட் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.இந் நிலையில், 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக சவுரவ் திவாரி 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரவி பிஸ்னோய் 25 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.போட்டியின் ஆட்டநாயகனாக கைரன் பொலார்ட் தெரிவானார்.இவ் வெற்றியையடுத்து புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...