முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் 27.09.2021 இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு -மாஞ்சோலை வைத்தியசாலை உட்பட, மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் தாதியர்களும், பணியாளர்களும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தாதியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாதமையினைக் கண்டித்தும், குறித்த மேலதிக கொடுப்பனவுகளை விரைவுபடுத்தி வழங்குமாறு கோரியுமே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு