யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயர் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி நேற்று (17.09.2021) வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி கலாநிதி க. சுதாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.நிகழ்நிலைத் தொழில்நுட்பம் வழியாக நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊடகக் கற்கைகள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பல்கலைக்கழகம் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடைமைகளில் ஒன்றாக, துறைசார் ஆர்வமிருந்தும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகத் தவறிய மாணவர்களுக்கும், தொழில்சார் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுவோருக்கும் பல்கலைக்கழகக் கல்வி மூலம் உரிய தகைமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிக்கப்படுவதாக துணைவேந்தர் பேராசிரியர்சி. சிறிசற்குணராஜா ஆரம்ப நிகழ்வில் தெரிவித்தார்.

இரண்டு வருட பகுதிநேரக் கற்கையாக ஆரம்பிக்கப்படும் உயர் டிப்ளோமா கற்கைநெறி துறைசார் விரிவுரையாளர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஊடக ஆய்வாளர்கள் ஆகியோரின் கல்விசார் பங்களிப்புடன் சுயநிதிக் கற்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளிநாட்டு நிதியுதவியுடன் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் வழியாக ஊடகவியலாளர்களுக்காக சில வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட இதழியல் டிப்ளோமா கற்கைநெறியினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத் துறைசார் முன்னெடுப்புடன் இந்த ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...