விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டம்!

Date:

12 முதல் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கும், தீராத நோய்களுடன் இருக்கும் சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் அவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படும்.இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் நேற்று (21) மேலும் தெரிவிக்கையில், நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக்கபடும் என்றும் கூறினார்.ஏனைய சிறுவர்களுக்கும் இந்த தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...