அரிசி விலை அதிகரித்தமைக்கான காரணம்-அமைச்சர் விளக்கம்!

Date:

பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக உறுதி தெரிவித்திருந்த போதிலும் உறுதி மொழியை நிறைவேற்ற தவறிவிட்டதாக தெரிவித்த அமைச்சர் அரசாங்கம் மேற்கொள்ளும் பொருளாதார முகாமைத்துவத் தீர்மானங்களை சில தரப்பினர் பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்வதாகவும் கூறினார்.

பொருளாதாரம் சம்பந்தமான முறையான அனுபவமற்றவர்கள் பொருளாதார முகாமைத்துவம் பற்றி அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பிழையென அர்த்தப்படுத்திக் கொள்கொள்கின்றனர். 623 பொருட்களுக்கு 100 வீத நிதி வைப்பை மத்திய வங்கி அறிவித்திருப்பது, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காகும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...