20 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அமெரிக்காவின் 9/11 தாக்குதல்!

Date:

அப்ரா அன்ஸார்.

உலக அரங்கில் பல நாடுகளின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்த, வல்லரசு என்று தங்களை அதிகாரமாக அழைத்துக் கொள்ளும் அமெரிக்கா ஒரு நாள் வாய் அடைத்துப் போனது.அது தான் நய்ன் இலவன் (9/11)தாக்குதல் விரிவாக சொன்னால் பென்டகன் தாக்குதல் இடம்பெற்ற நாளாகும் . 20 வது நினைவு தினமான இன்று இதன் பின்னனி வரலாற்றை பற்றி Newsnow வாசகர்களுக்கு இந்த கட்டுரையை வழங்குகின்றோம் .

21ம் நூற்றாண்டின் மிக மோசமான தாக்குதல் செப்டம்பர் 11 நியூயோர்க் இரட்டை கோபுர தாக்குதல் நய்ன் இலவன் என்றது ஒரு ஆங்கில செய்தித்தாள். மூன்று மணி நேரத்தில் சரிந்தது அமெரிக்கா என்றது இன்னோரு பத்திரிகை. சாத்தான்களுக்கு எதிரான போர் துவங்கிவிட்டது என்றார் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ். 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் இடிந்து தரைமட்டமாகியது .இதற்கு ஆப்கானில் இருந்து செயல்பட்ட அல்கெய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் தான் காரணம் என அமெரிக்கா முழு உலகையும் நம்ப வைத்தது, இதன் பின்னர் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் முழக்கத்தை தீவிரமாக முன்னெடுத்தன.

இரட்டை கோபுரத்தைத் தகர்த்தது என்னவோ பின்லேடன்தான் என முழு உலக அரங்கையும். நம்ப வைத்த அமெரிக்கா அதற்கான விதை போட்டது அவர்கள் தான் என்பதை மறைத்து விட்டார்கள்.இந்த உண்மை அப்போது பலருக்குத் தெரியாமல் போய்விட்டது. ஜிம்மி கார்ட்டர், ரீகன், ஜோர்ஜ் புஷ் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய அதிபர்களுக்கும் இந்தத் தாக்குதலில் மறைமுகப் பங்குண்டு என்பது மறுக்க முடியாததே.

அமெரிக்காவின் தூங்கா நகரம் என்றழைக்கப்படும் நிவ்யோர்க்கில் இருந்த உலக வர்த்தக மையக் கட்டடம், காலை 8:45 மணிக்கு மிகவும் பரபரப்பாகக் காணப்படும். அப்படித்தான் அன்றும் இருந்தது. 2001 செப்டம்பர் 11 அன்று காலை 8:45 மணிக்கு 104 தளங்களுக்கும் ஊழியர்கள் பணிக்குச் சென்று கொண்டிருந்தார்கள் . ‘காலை உணவுக்கு தங்களது உறவினர்களோடு செல்லலாம்’ என்ற திட்டத்தில் சிலர் இருந்திருக்கலாம். ‘இன்றைய நாளின் அடைவை எட்டிவிடலாம்; இந்தமுறை நமக்கு தான் பதவி உயர்வு கிடைத்துவிடும்’ என விவரிக்க முடியாத பல கனவுகளோடு பலரும் அன்றைய தினம் இருந்திருக்கலாம். ஏன், ‘இன்னும் சில மாதங்களில் நான் இந்த உலகத்தை பார்த்துவிடுவேன்’ என்று தாயின் கருவறையில் இருந்த அந்த 17 குழந்தைகளும் கூட நினைத்திருக்கலாம். ஆனால், அவையெல்லாம் 8:46-க்கு தொடங்கி 3 மணி நேரத்திற்குள் மண்ணோடு மண்ணாகிவிட்டது.

விமானங்களைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தப்பட்டது . ‘இதுபோன்றதொரு தாக்குதல் முறையை அதற்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை’ என்பதைப் போன்ற தாக்குதல்கள். தாக்குதலுக்கான ஆயுதங்களாக மொத்தம் நான்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. நான்குமே உள்நாட்டு விமானங்கள். பொஸ்டன் நகரில் இருந்து லொஸ்ஏஞ்சல்ஸ் சென்ற விமானங்கள் இரண்டு, நியூயார்க் – சான் ஃப்ரான்ஸிஸ்கோ, டல்லாஸ் – லொஸ் எஞ்சல்ஸ் விமானங்கள் இத் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

நான்கு விமானங்களிலும் தாக்குதலுக்கு அனுப்பப்பட்டது, நன்கு விமானம் ஓட்டும் பயிற்சி பெற்ற விமானிகளாகும். இவர்கள் பயிற்சி பெற்றது அமெரிக்க விமானப் பயிற்சி பள்ளிகளில்தான். விமானம் கிளம்பியதும் விமானி அறைக்குச் சென்று விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இரண்டு விமானங்கள் வர்த்தக மையத்துக்கு, ஒரு விமானம் பென்டகனுக்கு, மற்றொரு விமானத்தின் இலக்கு என்ன என்று தெரிவதற்கு முன்பே அது வெடித்துச் சிதறியதை காணொளிகளில் அவதானிக்க முடிகின்றது.

பொஸ்டனில் இருந்து கிளம்பிய விமானம் என்ன ஆனது என தெரியவில்லை’ என்று எஃபி.பி.ஐ அலுவலகம் தெரிவித்தது. அதே வேளையில் இரட்டை கோபுரத்தின் மீது முதல் விமானம் பயங்கரச் சத்தத்துடன் மோதியது. அந்த சம்பவத்தை பார்த்தவர்களால் மட்டும்தான், அதன் உண்மையான பயங்கரத்தை உணர முடியும்’ என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.பரபரப்பான மீட்டிங்குகள், கொஃபி ஷொப் அரட்டைகள் எல்லாம் கணநேரத்தில் தகர்த்தெறியப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் மேலும் ஒரு விமானம் மோதியதும் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரக் கட்டடம், தரை மட்டமானது.

இந்தத் தாக்குதலால் வெளிப்பட்ட புழுதித் துகள்கள் மட்டும் நியூயோர்க் மற்றும் அருகில் உள்ள மாகாணத்தில் பல மைல் தொலைவுக்குப் பரவி நின்றதைக் காண முடிந்தது. இரட்டைக் கோபுரங்களில் இருந்த அலுவலகங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியில் இருந்தனர். உலக வர்த்தக மையத்துக்கு தினமும் வந்து செல்வோர் எண்ணிக்கை சராசரியாக 1.4 லட்சம் பேர். இந்தத் தாக்குதலுக்குப் பின் அந்தப் பகுதியின் இடிபாடுகளில் இருந்து 144 திருமண மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டன. கர்ப்பிணிப் பெண்கள் 17 பேர் வயிற்றில் தங்களின் குழந்தைகளைச் சுமந்தபடியே உயிரிழந்தது கணக்கெடுப்பில் தெரியவந்தது. விமானம் மோதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அந்தக் கட்டடத்தில் பரவிய தீயை அணைக்க 100 நாள்கள் பிடித்தது. இது, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சோகமாகப் பதிவானது. அந்தத் தருணத்தில் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனும் தாக்கப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள் விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த ஒரு தகவலும் பதிவாகவில்லை என்பதுதான் அதிர்ச்சி.

தாக்குதல் நடத்தப்பட்ட நாளன்று வானில் பறந்த விமானங்களையெல்லாம் கண்டு மக்கள் அஞ்சினார்கள். இதன் உச்சம் என்னெவென்றால், விமான சேவைகளை நிறுத்துவது மட்டுமல்லாமல், மொத்த தொலைத்தொடர்பு சேவையையும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது. வெளிநாட்டிலிருந்து பலரும் தங்கள் உறவுகளைத் தொடர்புகொள்ள முடியாமல் பரிதவித்தனர்.தாக்குதல் பற்றிய தகவல், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் கவனத்துக்கு எடுத்தது. ‘அவர்கள் போரைத் தொடங்கிவிட்டார்கள்’ என்று அவசர,அவசரமாக குழுக்களை விசாரிக்க உத்தரவிட்டார். அதற்கெல்லாம் முன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்களா என விசாரித்துக் கொண்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த வார்த்தை முதன்முதலாக உச்சரிக்கப்படுகிறது. ”அல் – கொய்தா” அமைப்பு அமெரிக்காவுக்கு தலைவலி கொடுத்த இந்த அமைப்பின் தலைவர் யார் என்றால், சுற்றிவந்து ரீகன் என முடித்தார்.அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த அல்கெய்தா மற்றும் அதன் தலைவர் ஒஸாமா பின் லேடனை உலக அரங்கில் தீவிரவாதியாக பிரதிபலிக்க அமெரிக்கா எடுத்த பிற்போக்குத் தனமான செயல் என்பது அப்போது யாருக்கும் புலப்படாத உண்மை.

இத் தாக்குதலில் இறந்தவர்கள் 2,996 பேர் என புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் தங்கி இருப்பது கண்டறியப்பட்டு அமெரிக்கா – ஆப்கான் போருக்குத் தயாரானது. 1981-ம் ஆண்டு ரீகன் நினைத்தது ஆப்கானிஸ்தானை அமெரிக்காவுக்குச் சொந்தமானதாக்க வேண்டும் என்று. அதற்கு அப்போது சரியான காரணம் இருக்கவில்லை ஆனால், இப்போது வலுவான காரணம் இருக்கிறது. போர் என்ற ஆயுதத்தோடு ஆப்கானை நோக்கி விரைந்தது அமெரிக்கப் படைகள்.

இந் நிலையில் ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினர் , அந் நாட்டில் ஆட்சியை நிலைநாட்டியுள்ளனர். தலிபான் அமைப்பினர் ஆப்கானை கைப்பற்றியதை தொடர்ந்து , அங்கிருக்கும் தங்கள் குடிமக்களை அழைத்து வருவதற்காக பல்வேறு நாடுகள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந் நிலையில், தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின் லேடனுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

“20 ஆண்டு கால போருக்குப் பின்னரும், இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின்லேடனுக்குத் தொடர்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இந்த போருக்கு ஆப்கான் மீதான அமெரிக்க படையெடுப்பு எந்த காரணமும் இல்லை.ஆகவே ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்ததை அமெரிக்கர்கள் போருக்கான காரணமாக பயன்படுத்திக்கொண்டனர்” என்று கூறியிருந்தார்.

 

உலக அரங்கில் போராட்டங்களையும், தாக்குதல்களையும் மறைமுகமாக நடாத்தி வருகின்ற அமெரிக்கா அனைத்தையும் கச்சிதமாக நிறைவேற்றி விட்டு தாங்கள் தான் உலக வல்லரசு என்றும், பலம் பொருந்திய நாடு என்றும் கூறி வருகின்றது.எனினும் தங்களுடைய அதிகாரத்துக்கு சவாலாக இருக்கின்ற அல்கெய்தா,ஹமாஸ் , தலிபான் போன்ற இயக்கங்களை தொடர்ந்து வெளிப்படையாக வசைபாடுவதும், மறைமுகமாக அவர்களுக்கு அஞ்சுவதும் பழகிப்போன விடயம் தான்.

.

எம்முடைய நாட்டில் ஈஸ்டர் தாக்குதலிற்கு விதை போட்டது யாரோ ஆனால் இரையானது முஸ்லிம்கள்.அதே போல தான் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் ஆப்கானிஸ்தான் முழுமையாக துவம்சம் செய்யப்பட்டது உட்பட மத்திய கிழக்கு உட்பட இஸ்லாமிய உலகத்தின் பல பிரதேசங்கள் அமெரிக்காவின் சண்டித்தனத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிந்த விடயமே.குறிப்பாக நாகரீகத்தை கட்டியெழுப்பிய ஈராக் இன்று கட்டிட இடிபாடுகளுடனும் பல இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்ட மயான பூமியாக காட்சியளிக்கிறது இதே தொடரில் தான் சிரியாவின் பூமியை இரத்த பூமியாக தொடர்ந்து பார்க்க முடிகின்றது. மொத்தத்தில் இஸ்லாமிய உலகின் பொருளாதாரத்தையும், அவர்களுடைய செல்வாக்கையும்,முன்னேற்றத்தையும் தடுக்கின்ற நோக்கில் செய்யப்பட்ட ஒரு வரலாற்றுத் துரோகமாக இதனை பார்க்கலாம் எனினும் இதனை இன்னும் உலகம் புரிந்து கொள்ளாது இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...