Breaking News: இரவு நேர பயணங்களுக்கு தடை: வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி!

Date:

நாளை (01) முதல் நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அனுமதி வழங்கப்படமாட்டாது.அத்தோடு உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நாளை (01) முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.பொது போக்குவரத்து சேவைகளின் போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு பஸ்களில் யன்னல்களை திறந்து செல்ல வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...