JUST IN:யோர்க்கர் கிங் லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான, யோர்க்கர் கிங் என்றழைக்கப்படும் லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

38 வயதாகும் லசித் மாலிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். எனினும் தொடர்ந்தும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்த லசித் மாலிங்க, இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2004 (17வருடங்கள்) ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகம் பெற்றுக்கொண்ட லசித் மாலிங்க இன்று வரையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.மேலும், w.w.w.w.w O இதுபோன்ற ஒரு ஓவரை இலங்கையர் ஒருவராலேயே வீச முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்கவின் ஓய்வு குறித்து மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் உட்பட லசித் மாலிங்கவின் இரசிகர்கள் தங்களுடைய கவலையை பதிவிட்டு வருவதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகின்றது.

 

Popular

More like this
Related

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...