Whatsapp ஊடாக பண மோசடி | நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது

Date:

இணையம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும் அதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்புச்செய்ய வேண்டுமெனவும் கோரி WhatsApp ஊடாக குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...