இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 43 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 43 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக எவின் லூயிஸ் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் ஹர்ஷல் படெல் 34 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந் நிலையில், 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 17.1 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக கிளென் மெக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...