இலங்கை கிரிக்கட் வாரியத்தின் விசேட அறிக்கை

Date:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய இலங்கை தேசிய அணியின் சில வீரர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தவில்லை அல்லது வேண்டுமென்றே களத்தில் சரியாக செயல்படவில்லை என்று குறிப்பிட்ட சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கட் வன்மையாக மறுக்கிறது.

தேசிய அணியின் எந்தவொரு வீரருக்கும் எதிராக ‘கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து’ இலங்கை கிரிக்கட் அத்தகைய புகாரைப் பெறவில்லை.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை வென்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அதே அணியினர் டி20 தொடரிலும் பங்கேற்றனர் என்பதை இலங்கை கிரிக்கெட் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மட்டுமல்லாமல், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் தரவரிசையில் முக்கிய புள்ளிகளைப் பெற்றது.

இலங்கை தேசிய அணி, கடந்த காலங்களில் இருந்து, முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்று சரியான திசையில் செல்வதன் மூலம் முன்னேறுகிறது என்பது ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டு ஒப்புக்கொள்ளப்படுகிறது.

எனவே, ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில், தவறான செய்திகளை பதிவிடாது, ஊடக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அந்தந்த செய்தி நிறுவனங்களிடம் கோர விரும்புகிறது.

 

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...