கொரோனா தொற்றின் அபாயத்தில் இருந்து நாடு இதுவரை மீளவில்லை என இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், சமுதாயத்தில் அதிகமான தொற்றாளர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் டெல்டா வைரஸ் பரவும் போது நாடு ஆபத்தில் இல்லை என்று கூற முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கொரோனா அலை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.