கொவிட் அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம்- அமெரிக்கா அறிவிப்பு!

Date:

கொவிட் ஆபத்து காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.

கொவிட் அபாயத்தின் அடிப்படையில் இலங்கையை 4 வது மட்ட அதிக ஆபத்துள்ள நாடுகளில் ஒன்றாக பெயரிட்டு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதனை குறிப்பிட்டுள்ளது.இலங்கையைத் தவிர, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளை அதிக ஆபத்து உள்ள நாடுகளாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.அத்தியாவசிய கடமைக்காக இலங்கைக்குச் செல்ல விரும்பினால், முழுமையான தடுப்பூசி டோஸ்களை பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையின் படி முழுவதுமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்படும் வாய்ப்பு மற்றும் பரவும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...