திஹாரியில் கொவிட் 19 பரவலைத் தடுப்பது தொடர்பாக திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடல்!

Date:

திஹாரியில் கொவிட 19 பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அது பற்றி துறை சார்ந்தோரின் ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடலை Helping Thihariya அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு கடந்த (31-08-2021) செவ்வாய்க்கிழமை இரவு லப்சன் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் திஹாரியில் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு செய்ய வேண்டிய விடயங்கள் போன்ற பல அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன.

நிகழ்வில் பின்வரும் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

1. Dr. M.F.M. SALIHEEN

2. Dr. ROSANA NOUSHAD

3. Dr. FAIK MOHAMED

4. Dr. M.J.M. SHUAIB

5. Dr. SHAZNA ZUFRY

6. Dr. M.R.F. ZAHRIYA

7. Dr. RAZIYA NAWAS

8. Dr. M.T.N. HINAYA

9. Dr. A.M. FAWAS

நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு சார்பாக SUB INSPECTOR S.Z. JAYASIRI அவர்களும் கலந்துகொண்டார்.அடுத்த கட்ட நடவடிக்கையாக Helping Thihariya அமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தலைமைத்துவ சபை மற்றும் வைத்தியர்கள் உள்ளடங்களான குழு எதிர்காலத் திட்டங்களை வகுத்து பள்ளிவாசல்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஊர் பிரமுகர்களின் ஒத்துழைப்போடு செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊர் மக்களின் நலன் கருதி இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...