நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கையில் சிலர் இஸ்லாத்தின் மீது இதன் பழியை சுமத்த முனைவது கவலை தருகிறது!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்னிடம் (Jacinda Ardern) இருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள் உள்ளன.கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள நியூலின் சூப்பர் மார்க்கெட்டில் அப்பாவி பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பான செய்தியாக ஊடகங்களில் வெளிவந்தது. வெறுக்கத்தக்க இத்தாக்குதல் குறித்து அதிகமான கண்டன அறிக்கைகளும் வெளிவந்துள்ளன.

இது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மக்களுக்கு ஆற்றிய உருக்கமான அனுதாப உரையில் உணர்ச்சிகளை உசுப்பேற்றாது முக்கியமான ஒரு செய்தியை அழுத்தமாக முன்வைத்தார். அதில் அவர் “இந்த செயல் எந்த நம்பிக்கையின் சார்பாகவும் மேற்கொள்ளப்படவில்லை. இது ஒரு தனிப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த வெறுக்கத்தக்க செயலானது எந்தவொரு கலாச்சாரம் அல்லது இனம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டது அல்ல. இது யாராலும் அல்லது எந்த சமூகத்தாலும் ஆதரிக்கப்படாத ஒரு சித்தாந்தத்தால் பீடிக்கப்பட்ட ஒரு தனிநபரின் செயலாகும்’ எனக் குறிப்பிட்டார். இந்த செய்தி குறிப்பாக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே வைரலாக பரவி வருகிறது.

நியூசிலாந்து பிரதமரர் அவர்கள் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த உடனேயே மக்களுக்கு மத்தியில் மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் முன்வைத்த செய்தி கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும். உரிய நேரத்தில் காலத்துக்குப் பொருத்தமான ஒரு செய்தியாக அது அமைந்தது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையில் பிரதமர் ஜசிந்தா கூறிய விடயங்கள் வருமாறு:

தாக்குதலை நடத்திய இலங்கையரை “ஒரு தனி நபராக” மாத்திரம் அடையாளம் காட்டினார். அந்த நபரின் சமய நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் இனம் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் பார்வையை நீக்கி அது ஒரு தனிப்பட்ட நபரின் வெறுக்கத்தக்க செயலாக குறிப்பிட்டார். அதன் மூலம் ஐஎஸ் தீவிரவாதக் குழுவினரால் ஊக்கம் பெற்று தாக்குதலில் ஈடுபட்ட அவரது செயல் வெறுப்புணர்வு நிறைந்த ஒரு தனி நபரின் தவறான செயல் என்றே வரையரை செய்தார். அத்தகைய பார்வை காரணமாக தாக்குதல் நடத்தியவரின் தாய்நாட்டில் உள்ள மக்கள் மத்தியிழும் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டார். இது பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்திற்கு மிகவும் சிறந்த படிப்பினையை தரும் முன்மாதிரியான நடத்தையாகும்.

பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அவர்கள் இந்த சம்பவத்தை அணுகிய முறைமையானதுஇ தாக்குதலை நடத்திய நபர் விசுவாசம் வைத்துள்ள ஐஎஸ் தீவிர சிந்தனையாளர்களுக்கும் மற்றும் உண்மையான பயங்கரவாதத்திற்கும் எதிராக முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராட வழி காட்டுகிறது.

நியூசிலாந்து உலக்கு வழங்கியுள்ள மூலோபாயமானதுஇ எல்லை மீறிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் நிச்சயமாக வெற்றியை கொண்டு வரும். அவ்வாறே முடிவில்லாமல் தொடரும் உலகமயமாக்கப்பட்ட போர்கள் காரணமாக தாம் பலிக்கடாவாக்கப்பட்டவர்கள் எனவும் மில்லியன் கணக்கான சிவிலியன்களை அகதிகளாக மாற்றி அகதிவாழ்க்கையின் பிழைப்புக்காக நவீன ‘அடிமைகளாக’ மாறியுள்ளோம் எனவும் மானசீகமாக உணர்ந்தவர்களும் தங்களது எதிர்ப்பை விரிவாக்காமல் தடுப்பதிலும் நியூசுலாந்தின் வியூகம் வெற்றியை தரும் என உறுதியாக நம்ப முடியும்.

தீவிரவாதியை அவரது உறவினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் அவரது நம்பிக்கை சார்ந்த சமூகத்தினர்களை விட்டும் வேறுபடுத்தி நோக்கும் ஒரு இலக்குமையப்பட்ட மூலோபாய பார்வை இல்லாத சூழலில் ‘எதிர்ப்பு நடடிவடிக்கைகள், வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் ‘கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீமைபயக்கும் சுழற்சியாக வெடித்துச் சிதறும். நியூசுலாந்து நாட்டின் அமைதிக்கும், சமாதான சகவாழ்வுக்கும், மற்றும் நல்லிணக்கத்திற்கும் பெரும் பங்கம் ஏற்படும் வகையில் பேரிடியாக விழுந்த இரண்டு நிகழ்வுகளின் போது பிரதமர் ஆர்டெர்ன் துணிவுடன் கையாண்ட அணுகுமுறையிலிருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களே இவையாகும். அமைதியின் மடியில் இடியாக விழுந்த முதல் நிகழ்வு 2019 மார்ச் 15 அன்று நியூசிலாந்து, கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள அல் நூர் பள்ளிவாசல் மற்றும் லின்வுட் இஸ்லாமிய மையம் ஆகியவற்றில் வெள்ளி தொழுகையின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமாகும். இரண்டாவது செப்டம்பர் 3 ஆம் திகதி ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவமாகும்.

நாம் ஆக்லாந்து நகர தாக்குதலை கண்டிக்கும் அதேவேளை, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் அவர்கள் ஆக்லாந்து தாக்குதலை ஆணுகிய முறை, மக்களுக்கு அதனை முன்வைத்த விதம், அதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து அவரை மனமாரப் பாராட்டுகிறோம். எனினும் இந்தப் பாராட்டு நியூசிலாந்து காவல்துறைக்கு சேராது. அது வேறொரு விடயம்!

ஆக்லாந்து தாக்குதல் நடத்திய நபரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் மேற்கொண்ட அந்த தாக்குதல் தவறானது என்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் குறித்த நபர் நீண்ட காலமாக மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்;ளர் என்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லையே என குடும்பத்தினர் கவலை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.* சூப்பர் மார்க்கெட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தாக்குதல் நடத்தியவர் “பைத்தியம் பிடித்தவர் போல் ஓடுகிறார்‘ என்று கூறியது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். தாக்குதல் நடத்திய நபர் உண்மையில் பயங்கரவாதியா அல்லது மனநலப் பிரச்சினைகளால பாதிக்கப்பட்டவரா என்பதை ஆராய்ந்து நிரூபிக்கும் பொறுப்பு நியூசிலாந்து அதிகாரிகள் மீதுள்ள பொறுப்பாகும். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல.

கிவி பிரதமர் ஆர்டெர்ன் மேற்படி தாக்குதலை நடத்திய இலங்கையரை ‘ஒரு தனி நபராக’ மாத்திரம் அடையாளம் காட்டி, அந்த நபரின் மதம், கலாசாரம், இனம் சார்ந்து நின்று பார்க்கும் குறுகிய பார்வையை நீக்கியதன் மூலம் மனிதநேய உணர்வுக்கு வாழ்வு கொடுத்துள்ளார். ஆர்டெர்ன் இவ்வளவு துல்லியமாக இந்த சம்பவம் குறித்து பேசி, சிறந்த முறையில் அதனை அணுகியதன் காரணமாக மதங்கள் மீது வீண் பழிகள் சுமத்தப்படுவதை தடுத்துள்ளார்கள். இனக் குழுமங்கள் மத்தியில் மோதல்கள் ஏற்படாமல் பாதுகாத்துள்ளார்கள். அதேவேளை இலங்கையில் சிலர் இந்த தாக்குதல் சம்பவத்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி முஸ்லிம்களை குற்றம் சுமத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது கவலை தருகிறது. கிவி பிரதமர் ஆர்டெர்ன் குறிப்பிட்டது போல இந்த சம்பவம் குறித்து மிகுந்த நிதானத்துடன் நடுநிலையாக அணுகும் போதுதான் இலங்கையர்கள் மத்தியில் நல்லுறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வழி வகுக்கும்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...