நீர்கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் அலுவலக குப்பைத் தொட்டியில் கைக்குண்டுகள் மீட்பு!

Date:

நீர்கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.நேற்று பிற்பகல் (21) குறித்த குப்பைத் தொட்டியிலிருந்து கழிவுகளை அகற்றும் சந்தர்ப்பத்தில் நகர சபை பணியாளர் ஒருவரினால் இந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த கைக்குண்டுகள் குறித்த குப்பைத் தொட்டியில் எவ்வாறு இடப்பட்டமை என்பது தொடர்பில் இன்னும் உரிய தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...