நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்பான விபரம்!

Date:

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் 25,147 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று (04)  117,038 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 887,295 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.அத்துடன் இதுவரை 159,088 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 37,737 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.அதேபோல், இதுவரை 354,813 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 191,490 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 772,340 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 702,790 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...