பழைய சட்டங்களை மீண்டும் அமுல்படுத்தும் ஆப்கான் அரசு! 

Date:

ஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அந் நாட்டின் சிறைத் துறை பொறுப்பாளர் முல்லா நூருதின் தூராபி கூறியதாவது:

எங்களது முன்னைய ஆட்சியில் நிறைவேற்றதைப் போலவே, மதச் சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் நிறைவேற்றப்படும்.மரண தண்டனைகள், கைககளை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய, உறுப்புகளைத் துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமாகும்.1990ஆம் ஆண்டுகளில் இந்த தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன. இந்த முறை இத்தகைய தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் நிறைவேற்றப்படலாம்.

எங்களது முந்தைய ஆட்சியின்போது பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்தது தேவையில்லாதது. எங்களது சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...